/ வரலாறு / இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்களிப்பு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்களிப்பு
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் குறித்த தகவல்களை தொகுத்து தந்துள்ள நுால். காந்திஜி வருகைக்குப்பின் அதிக அளவில் கலந்து கொண்டதாக கூறுகிறது. தென்மாவட்டத்தில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் நிறைந்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பல பெண்களின் தியாகத்தை வெளியுலகிற்கு காட்டுகிறது. ஆண்களுக்கு நிகராக ஆயுதம் ஏந்தியும், அகிம்சை முறையிலும் போராடியது தனித்துவமாக உள்ளது. போராட்டத்தில் எதிர்கொண்ட பிரச்னைகளையும், கொடிய துன்பங்களையும், சிறைவாசத்தையும் அறியத் தரும் நுால்.– இளங்கோவன்