/ ஆன்மிகம் / இறையருள்

₹ 130

அரிதான பல்வேறு தகவல்களால் நிரம்பி வழியும் அற்புத நுால். ருத்திராட்ச மரங்கள் நேபாளத்தில் மட்டுமின்றி, இந்தோனேஷியாவிலும் நிறைந்து காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. எந்நேரமும் ருத்திராட்சத்தை அணிந்திருக்கலாம் என்று எடுத்து கூறுகிறது. அதன் மருத்துவ குணமும், மகத்துவமும் சொல்லப்பட்டுள்ளது. எந்தெந்த நட்சத்திரக்காரர்களுக்கு, எத்தனை முக ருத்திராட்சம் அணியலாம் என்ற ஜோதிடத் தகவலும் உள்ளது. சாளக்கிராமத்தில் 68 வகைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அலங்காரப் பொருட்களாக்கக் கூடாது என எச்சரிக்கிறது. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் சிறப்பை பிரமிக்க வைக்கும் வகையில் அறிய வைக்கிறது. வாசித்து பயன் பெற்று, போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாக உள்ள புத்தகம். – டாக்டர் கார்முகிலோன்


புதிய வீடியோ