/ கதைகள் / கடைசி குரு

₹ 150

மகாபாரதம், பாகவதம் காவியங்களை உரை சித்திரமாக படைத்துள்ள நுால்.அரக்கி பூதகியின் பாலையருந்தி அழித்தார் கண்ணன். முடிவில், ‘மரித்தேன்’ என கதறாமல், ‘உயிர்த்தேன்’ என பூதகி உவகை கொள்வது புதுமை. தாய்மைப்பசியில் வாடிய குந்தி வரங்கள் பெற்றதும், ‘அரச குடும்பம் காட்டும் தாயன்பில் அரசியல் தான் கலந்திருக்கிறது’ என்ற கர்ணனின் சிந்தனை சிறப்பானது. அழகிய விழிகளை காந்தாரி ஏன் மறைத்தாள்; விழியற்றவரை ஏன் மணந்தாள் போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது உரை ஓவியம். குந்தியிடம், ‘பெண்ணின் கற்புக்கு தீங்கு செய்பவன்போல், கண்ணியத்திற்கு தீங்கு செய்பவனும் குற்றவாளிதான்...’ என, காந்தாரி குமுறுவது அற்புதம். பாகவதம், மகாபாரத கதை மாந்தர்களை புதிதாக காட்டும் பிரமிப்புஊட்டும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை