/ ஆன்மிகம் / கடவுள்–ஆலயங்கள்–விளக்கம் ஐந்து
கடவுள்–ஆலயங்கள்–விளக்கம் ஐந்து
அருட்பிரகாச வள்ளல் பெருமான் வழியில் பிரபஞ்சப் பேருண்மைகளை வெளியிட்டு, ஒளி நெறி மார்க்கம் பற்றிய கருத்துகளைக் கூறும் நுால். இறை ஞான வாழ்வியல் ரகசியங்களை வெளிப்படுத்துகிறது.கடவுள் மனிதத் தொடர்பு ஐந்து தலைப்புகளில் ஆய்வு செய்யப்படுகிறது. மனிதனுக்கான கடவுள்கள், மனிதன் படைத்த கடவுள்கள், மனிதனைப் படைத்த கடவுள்கள், மனிதனுக்குக் கடவுள்கள், மனிதனே கடவுள் என்ற நிலைகள் விளக்கப்பட்டுள்ளன. கோவில்கள் ஐந்தாக பிரிக்கப்பட்டு விளக்கம் தரப்பட்டுள்ளது. பேராலயம், புவனாலயம், தேவாலயம், தேகாலயம், குடிலாலயம் என விவரிக்கப்பட்டுள்ளன. பாலுக்குள் நெய்யாக பிரபஞ்ச ரகசியம் மறைந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒளி, நெறி, வேத உண்மைகளை, யோக நெறியில், அறிவியல் நோக்கில் ஆராய்ந்து சொல்லும் அருமையான நுால்.– முனைவர் மா.கி.ரமணன்