/ புத்தக மதிப்புரை / கடவுளின் சிங்கப்பல்

₹ 360

பல் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக எளிய நடையில் அமைந்த மருத்துவ அறிவியல் நுால். ஒவ்வொரு அத்தியாயமும் பற்கள் தொடர்பான சிறப்பு கவிதையுடன் துவங்கி, வியப்பு தரும் செய்திகளுடன் அமைந்துள்ளது. உயிரினங்களின் பற்களுக்கு உள்ள முக்கியத்துவம், திறன், அமைப்பு முறை, அவை பயன்படும் வகைமுறை குறித்த செய்திகள் வியப்பு ஏற்படுத்துகின்றன. மனித உடலின் முக்கிய உறுப்பான வாய் மற்றும் உதடுகள் குறித்த சுவாரசிய தகவல்களும் பகிரப்பட்டுள்ளன. மனித உடலில் நாக்கின் பயன்பாடு, உமிழ்நீர் செயல்பாடு, கன்னம், முகம் மற்றும் தொண்டை என, பல்வேறு உறுப்புகளின் முக்கியத்துவத்தை தொட்டுக்காட்டி எட்டு அத்தியாயங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து பற்கள் பற்றிய சிறப்பு விபரங்கள் கூறப்பட்டுள்ளன. பற்களின் வகைகள், செயல்பாடு தொடர்பாக உள்ள சொற்கள் அமைந்தது குறித்து வரலாற்று பின்னணியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஒரு வகையான வெட்டுப் பற்கள், உண்ண, சிரிக்க, பேச ஆகிய செயல்களுக்கு உதவுவதை எடுத்து கூறி அறிவூட்டுகிறது. இயல்பிலே சிலருக்கு பற்கள் குறைவாக முளைக்கும் என்கிறது. பற்களை முன்வைத்து நடந்த சூனியம், மந்திரவாதம் குறித்த விபரங்களும் வரலாற்று ரீதியாக விரிவாக பதிவாகியுள்ளன. பல் மருத்துவம் வளர்ச்சி பெற்ற விதம் தெளிவாக தரப்பட்டுள்ளது. பல் மறுசீரமைப்பு குறித்தும் விபரங்கள் உள்ளன. பற்களை பாதுகாக்கும் எளிய வழிமுறைகள், முக்கியத்துவத்துடன் இடம் பெற்றுள்ளன. பற்கள் குறித்து வியப்பான செய்திகள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. சுவாரசியமாக வாசிப்புக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள பல் மருத்துவ அறிவியல் நுால். – மலர்