/ ஆன்மிகம் / கவசத்திரட்டு
கவசத்திரட்டு
பக்தர்கள் உடல் நலன் காக்க மகான்கள் அருளிய கவசப் பாடல்களின் தொகுப்பு நுால். காசிப முனிவரின் விநாயகர் கவசம், வரதுங்கராம பாண்டியரின் சிவ கவசம், தேவர்களின் சக்தி கவசம், தேவராய சாமிகளின் கந்தர் சஷ்டி கவசம் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளன. பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசம், இடும்பன் கவசம், பூவை கலியாண சுந்தரனாரின் கடம்பன் கவசம், காஞ்சி நாகலிங்க முனிவரின் கந்தர் கவசம் போன்றவையும் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு உரையும், குறிப்புரையும் தரப் பட்டுள்ளன. விநாயகரின் 45 பெயர்கள், சக்தியின் 52 பெயர்கள் தரப்பட்டுள்ளன. சைவ சமயத்தவருக்காக இலக்கிய நயமுடன் அமைந்துள்ளது. பக்தியோடு படிக்க உகந்த தொகுப்பு நுால். – பின்னலுார் விவேகன்




