/ ஆன்மிகம் / மகா பெரியவா (பாகம் – 14)
மகா பெரியவா (பாகம் – 14)
கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகா பெரியவர், சித்தி அடைந்த பிறகும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை கூறும் நுால். வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். ரயிலில் பயணிக்க இருந்தவரை விபத்திலிருந்து காப்பாற்றிய அதிசயம், திருப்பதி கோவில் அர்த்தமண்டபத்தில் வாசல்கள் திறக்க தீர்வு கண்டது, நோய் சிரமத்தை எப்படி எடுத்துக் கொள்வது போன்ற வழிகாட்டல்கள் கூறப்பட்டுள்ளன. வாழ்ந்த காலத்தில் தனக்கு விக்ரகம் வடிக்க விரும்பிய ஒரு ராஜாவின் விருப்பத்தை நிறைவேற்றிய சம்பவம், பெண்ணுக்கு நிஜமான அழகு எது என்பதற்கான விளக்கம் என, பல விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பரவசமூட்டும் செய்திகள் நிறைந்த நுால். -– தி.செல்லப்பா




