/ கதைகள் / மதயானைக் கூட்டம்

₹ 500

கதை, திரைப்படமாக உருவான விதத்தை ஆவணப்படுத்தியுள்ள நுால். இரண்டு பெண்களை திருமணம் செய்த குடும்ப தலைவரை மையமாக உள்ளது கதை. கிராம வளர்ச்சிக்கு அந்த குடும்பம் உதவுவதுடன், கட்டுப்பாடும் விதிக்கிறது. அந்த குடும்பத்துக்கு அஞ்சுகின்றனர், மக்கள். குடும்பத்தைச் சேர்ந்தோர் முரண்பட்டு பகை கொள்கின்றனர். அது சண்டையாகி தாக்குதலாக வெடிக்கிறது. அந்த மோதலில் நடக்கும் கொலை தான், கதையின் உச்ச திருப்பமாக உள்ளது. தொடர்ந்து, குடும்பத் தலைவரும், அவரது மகன்களும் கைது செய்யப்படுவது திரைக்கதை காட்சி பூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. திரைக்கதையுடன் ஒவ்வொரு காட்சியும் படம் பிடிக்கப்பட்ட விதம் விவரிக்கப்பட்டுள்ளது. மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் ஆவணமாக மலர்ந்துள்ள நுால். – மதி


முக்கிய வீடியோ