/ வரலாறு / நம்ம சென்னை சுவாரஸ்யங்கள்
நம்ம சென்னை சுவாரஸ்யங்கள்
சென்னை நகரத்தின் வரலாற்று பின்னணி பற்றி சுவையான செய்திகளை துணுக்குகளாக தொகுத்து தரும் நுால். இந்தியாவில் முதல் நகர சபையாக உருவானது முதல், சென்னை நகரம் குறித்த பல்வேறு தகவல்கள் தரப்பட்டு உள்ளன. துணுக்குகளாக தகவல்கள் எளிதாக வாசிக்க ஏற்ற வகையில் தொகுக்கப்பட்டு உள்ளன. சென்னை நகரில் பூர்வீகமாக வாழும் மக்கள் பற்றியும், அவர்கள் பயன்படுத்தும் வட்டார மொழி நடை குறித்தும் ஏராளமான தகவல்களை கொண்டுள்ளது. சென்னை நகரம் குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகளின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். – ராம்




