/ கதைகள் / நந்திக் காவல்!

₹ 250

ஆன்மிகம் கலந்த த்ரில்லர் என்ற அறிமுகத்துடன் வெளியாகியுள்ள நாவல் நுால். கடற்கரை கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு, சிற்ப ஆராய்ச்சிக்கு வருகிறாள் ஒரு பெண். அந்த ஊரை நந்தி தான் காவல் காக்கிறது என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. அந்த கோவில் குருக்களை, சிலையாக நின்ற நந்தி குத்தியதாக வதந்தி பரவியிருந்தது. ஆனால், அவரது மகனே கொன்ற உண்மை தெரிய வருகிறது. இப்படி கதாபாத்திரங்களை உருவாக்கி பரபரப்புடன் கதை நகர்கிறது. இறுதியில் நீதிமன்ற வழக்குடன் முடிகிறது. கதை துவக்கத்தில் உள்ள திகில் கடைசி வரை தொடர்கிறது. மனிதர்களின் சுயலாப செயல்களை தெளிவாக வெளிப்படுத்துகிறது. திடீர் திருப்பங்களுடன் நகர்கிறது. படிக்கும் போது பெரும் பரபரப்பை உணர வைக்கும் நாவல். -– முகிலை ராசபாண்டியன்


சமீபத்திய செய்தி