/ கவிதைகள் / நெருஞ்சி முள் பூவானது!

₹ 150

காதல், சமூகம், மனிதம் ஆகிய பொருண்மைகளில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். காதல் கனிரசம் பாடல்களில் பாய்ந்து ஓடுகிறது. அவள் பார்த்தால் தென்றல் தடுமாறும், தொட்டால் எதுகை மோனை இடம் மாறும், நடக்கும் மெட்டி ஒலியில் கவிதை ஒலிக்கும் என வெண்பா விருத்தம் தலைப்பில் வருகிறது. மனிதநேயத்தை ‘மரணிக்கும்வரை மனிதத்தை தேடுவதில்லை, மனிதத்தை நாடும் போது மரணம் தேடுகிறது’ என பாடுகிறது. சோகமும் கண்ணீரும் சேர்த்து எழுதிய கவிதைகளும் உள்ளன. தாயின் அன்பில் எப்போதும் தாய்ப்பால் வாசம் வீசுவதாக சொல்கிறது. காதல் மொழியில் கடின சொற்களும், இனிமையாக மாறிவிடுகின்றன என்கிறது. புதிய வெளிச்சத்தால் நெருஞ்சி முள்ளையும் பூவாக்கும் கவிதை நுால். – முனைவர் மா.கி.ரமணன்


சமீபத்திய செய்தி