/ கட்டுரைகள் / நினைவலைகள்
நினைவலைகள்
வாழ்க்கையில் மதிப்புமிக்க செயல்களால் மனங்கவர்ந்தவர்களை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கும் நுால். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களின் சிறப்பை உணர்வுப்பூர்வமாக விளக்குகிறது. நம் நாட்டு தேசிய கீதத்தின் மாண்பை விளக்கும் வகையில் தமிழாக்கம் செய்து தரப்பட்டுள்ளது. வாழ்வில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து, அர்த்தமுள்ள நினைவுகளை பதிவு செய்துள்ளது. நன்றி மறவாத மனதுடன் பலரை நயமுடன் அறிமுகம் செய்கிறது. பழகிய போது கண்ட உயர்ந்த பண்புகளை எடுத்துரைக்கிறது. வாழ்க்கையில் கற்றதையும் பெற்றதையும் நினைவலைகளை துலக்கி சிறப்புடன் அறிமுகம் செய்யும் நுால். – ராம்