/ புத்தக மதிப்புரை / நுார் ஒரு சாமானியனின் இறையுணர்வு அனுபவங்கள்
நுார் ஒரு சாமானியனின் இறையுணர்வு அனுபவங்கள்
ஆன்மிக நிலையை எளிதாக பெறுவதை அனுபவங்கள் வாயிலாக எடுத்துரைக்கும் நுால். ஆன்மிக நிலையை அடைவது என்பது மிகவும் கடினமானது; எளிதில் அந்த உணர்வை பெற முடியாது என்ற வாதத்தை பொய்யாக்கும் விதமாக இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. துறவியரும், ஞானியரும் தான் ஆன்மிக நிலையை அடைய இயலும் என்ற பார்வையை, அனுபவ கதையை கூறி மறுக்கிறது. ஆன்மிகம் என்பது எங்கோ சென்று அடைய வேண்டிய இலக்கு அல்ல; அது நமக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் அற்புத நிலை என்பதை எடுத்துரைக்கிறது. வாழ்க்கை பயிற்சிகள் வழியாக இதை அடைவதை கூறுகிறது. கேள்விகள் எழுப்பி, அதன் வழியாக அமைதியை அடைந்தவரின் வாழ்க்கையை விவரிக்கிறது. அனுபவங்களின் தொகுப்பாக உள்ள நுால். – மதி




