/ புத்தக மதிப்புரை / ஒரு காதல் கதை

-: 755 000 9565 பக்கம் : 252 விலை : ரூ.280 மனித உணர்வுகளை சொல்லும் கதை நுால். அப்பா – மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல... எந்த தலைமுறையாக இருந்தாலும் தந்தை – மகன் பிரச்னைக்கு தீர்வு கிடையாது என சுவைபட விவரிக்கிறது. வாயும், இதயமும் எல்லாருக்கும் எல்லா நேரமும் ஒன்றாக இருக்காது என்பதற்கு தந்தை – மகன் உரையாடல் ஒரு சோறு பதமாக சொல்லலாம். மெத்த படித்த சீனியர் சிட்டிசன்களின் வடிகால் வங்கி பற்றி, ஓங்கி உச்சந்தலையில் அறைவது போல சொல்லப்பட்டிருக்கிறது. சினிமா காதலாக இல்லாமல், நிஜ காதலைப் போல மவுனத்தில் நிரம்பி வார்த்தைகளுக்கு திரையிட்டு, வாழ்க்கை முறையை காட்டியிருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய குடும்ப கதை நுால். – எம்.எம்.ஜெ.,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை