/ பெண்கள் / பெண்ணுக்கும் உண்டு பேராற்றல்

₹ 60

பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் முன்னேற ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். வாழ்க்கையில் பல்வேறு தடைகளையும், இன்னல்களையும் தாண்டி வென்று சாதனை படைத்த பெண்களை முன் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. கடும் முயற்சி எடுத்து முன்னேற்றப்பாதையில் நடை போட்டு வரும் பெண்களின் ஆளுமை, நிர்வாகத்திறனை உதாரணமாக முன்வைத்து விளக்கியிருப்பது வழிகாட்டும் வகையில் உள்ளது. திரைப்படத் துறையில் கால் பதித்துள்ளோர், உணவு உற்பத்தி துறைகளில் சாதித்து வருவோர், தொழில் நுட்பம் சார்ந்து உழைப்போரின் செயல்பாடுகளை வரிசைப்படுத்தி வழிகாட்டுகிறது. முயற்சியுடன் முயன்றால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை வெளிச்சத்தை ஊட்டும் நுால். -– சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை