/ புத்தக மதிப்புரை / பெரிய புராணம் மூலமும் உரையும்

₹ 860

பெரிய புராணத்திற்கு விளக்க உரைகள் தரும் நுால். சைவ சமய சித்தாத்தங்களை பரவச் செய்த 63 நாயன்மார் வரலாறு பாடல்களை உள்ளடக்கியுள்ளது. தொடக்கத்தில் நாயன்மார் புராணங்களைப் பாடும் பெரிய புராணத்தை உருவாக்கியதை முன்வைக்கிறது. பாடல்களுக்கு தெளிவான விளக்கம் தருகிறது. மூலப்பாடல்களில் இறையுணர்வுகளை விளக்கங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு சருக்கத்தின் கீழும் உட்தலைப்புகள் தந்திருப்பது, சிக்கலற்ற வாசிப்புக்குத் துணை செய்கிறது. சிவத்தொண்டு, சிவனடியார் தொண்டு பற்றியும் உணர வைக்கிறது. இறுதியில் பாட்டின் முதற்குறிப்பகராதியும் இணைக்கப்பட்டுள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு