/ கவிதைகள் / புதிர்க்கள சங்கமங்கள்
புதிர்க்கள சங்கமங்கள்
வாழ்வின் பரிணாமங்களை அழகாக வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். தாய், தந்தை, குரு, தெய்வம், தர்மம், அன்பு, ஆழ்கடல் மனம் உட்பட, 93 தலைப்புகளில் பாய்ந்து ஓடுகின்றன. சிந்திக்க துாண்டும், ‘நாய்களை நம்பலாம்’ என்ற தலைப்பில், ‘குரு தட்சணையாய் விரல் கேட்கும் காலம் போய், தலை கேட்கும் காலம்’ என எண்ணத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளது. ஆணவத்தால் வல்லரசுகள் நடத்தும் போரையும், பீரங்கி குண்டுகள் செய்யும் நாசத்தையும், கவிதை கேடயத்தால் தடுக்கிறது. கடன் பயத்தை, ‘ஆழ்கடல், வானத்தின் நீலத்தை கடன் வாங்கியதால் அலை பாய்கிறது. அதுபோல் கடன் வாங்கியவர் மனம் குமுறுகிறது’ என காட்டுகிறது. கருத்தாளம் மிக்க கவிதைகளின் தொகுப்பு நுால். – முனைவர் மா.கி.ரமணன்




