/ ஆன்மிகம் / இராமகாவியம்

₹ 85

இதிகாச நுாலான ராமாயணத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள், கற்பிக்கும் பாடத்தை தொகுத்து தரும் நுால். ராமாயண கதாபாத்திரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அலசலாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் விடுக்கும் செய்திகளை நன்கு உணர்ந்து எழுதப்பட்டுள்ளது. ராவணன், இந்திரஜித், கும்பகர்ணன், மந்தரை, சூர்ப்பனகை, தாடகை, அகலிகை உட்பட, 19 கதாபாத்திரங்கள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன. தனி மனித பூசல்களும், நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளும் மண், பொன், பெண்ணுக்காக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. தவறான செயல்களால் ஏற்படும் விளைவுகளை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் படைக்கப்பட்டதன் வழியாக உணர்த்தப்படும் அறநெறிகளை அறிய தருகிறது. ராமாயண கதை அடிப்படையில் அமைந்த நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை