/ ஆன்மிகம் / பார் புகழ் ஷீரடிபாபா

₹ 240

நம்பிக்கை, பொறுமை என்ற எளிய தத்துவங்கள் எவ்வளவு அரிய பலன்களை தரும் என்று போதித்தவர் ஷீரடி பாபா. அவர் செய்த அற்புதங்கள் ஏராளம். பல்லிகள் பேசும் பாஷை கூட அவருக்கு புரியும்; தண்ணீரில் விளக்கை எரிய வைத்தார். இன்றைக்கு சிறிய கிராமமாக இருக்கும் இந்த ஷீரடி, பின்னொரு காலத்தில் உலகமே போற்றும் தலமாக மாறும்; அதன் மதிப்பை அளவிடவே முடியாது என்று தீர்க்கதரிசனமாக சொன்னார். அது இன்று நிஜமாகிவிட்டது. பாரதத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஷீரடிக்கு பக்தர்கள் வந்து குவிகின்றனர். அதற்கு காரணம், அந்த மகான் வாழ்ந்த காலத்திலும், தெய்வமாக இப்போது வாழும் காலத்திலும் செய்கின்ற அற்புதங்களே ஆகும். யாராவது பேதிக்கு கடலைப் பருப்பை மருந்தாக கொடுப்பரா... பாபா ஒரு நோயாளிக்கு அதை கொடுத்து குணப்படுத்தினார். இறப்பு குறித்து அச்சப்படுவோருக்கு, அதன் இயற்கையான தன்மை பற்றி உபதேசம் செய்து பயத்தை நீக்கினார். அவரது அமுத மொழிகள் ஒவ்வொன்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அவரது வாழ்க்கை வரலாற்றையும், அற்புதங்களையும், உபதேசங்களையும் தொகுத்து தரப்பட்டுள்ளது. பாபாவின் பக்தர்களும், பாபாவை அறிந்து கொள்ள விரும்புவோரும் அவசியம் படிக்க வேண்டிய நுால். – தி.செல்லப்பா


சமீபத்திய செய்தி