/ கவிதைகள் / தங்கைகளே! தம்பிகளே! உங்களுக்காக!

₹ 125

அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சிறுவர் -– சிறுமியர் மனதில் பதியும்படி படங்களுடன் அமைந்து உள்ளன. உயர்வெல்லை, நுனிப்புல் ஆகாது, புதுமை கொடுக்கும், இணைதல் வரம், உண்மை வழி, விண்ணும் தொடும், அறிவியல் அற்புதமே போன்ற தலைப்புகளில் பாடல்கள் உள்ளன விஞ்ஞானி நெல்லை சு.முத்து எழுதிய அறிவியல் ஆத்திசூடியை மையக் கருத்தாக்கி, சிறுவர் மனதில் பதியும்படி சந்த நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இனிமை நிறைந்ததாக, ‘ஐயம் எழுவது தவறில்லை அடிக்கடி வரினும் தப்பில்லை மெய்யாம் உண்மை தெளிவு பெற மேன்மை வழிகள் திறந்து விடும்’ என்பது போல் பாடி புரிய ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். – ராம்


புதிய வீடியோ