/ கதைகள் / சொம்புநீர்ப்பூ

₹ 100

வசீகர சொற்களாலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையிலும் உளவியல் ஆழம், நினைவுகளை துாண்டும் நடை, பிரதேச அழகியலை விவரிக்கும் விதம் தனித்துவமாக இருக்கிறது. மனிதர்களின் கூட்டு நினைவுகளை தொட்டு, கனவு, நிஜத்திற்கு இடைப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. அழகியல் பரிமாணத்தைக் காட்டும் சொம்புநீர்ப்பூ கதை வசீகரிக்கிறது. கனவிற்கும், நினைவிற்கும் இடைப்பட்ட நிலையில் உயிர் பெற்றுள்ள ‘ஓவியம்’ கதை, மனதிற்கு இணக்கத்தை தருகிறது. தன்னிச்சையாக வானில் திரியும் பறவை போல பறக்கும் கதைகள் ஒவ்வொன்றும் இலகுவாக புது மொழியை புகட்டுகின்றன. வாசிப்புக்கு வலு சேர்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு


முக்கிய வீடியோ