/ ஆன்மிகம் / ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் மூலமும், உரையும்

₹ 120

விஷ்ணு ஸஹஸ்ரநாம சுலோகத்திற்கான அர்த்தத்தை பதம் பிரித்து விளக்கும் நுால். விஷ்ணு ஸஹஸ்ரநாமம் உபதேசிக்கப்பட்ட முறை, ஸத்வ குணம் மிக்க தர்மபுத்திரருக்கு பீஷ்மாச்சாரியரால் உபதேசிப்பட்ட விபரம் முதல், பாராயணம் செய்து ஜபிப்பதால் உண்டாகும் நன்மைகள் வரை விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாம நாமாவளியில், ஒவ்வொரு வாக்கியத்தையும் பதம் பிரித்து பொருள் கூறியிருப்பது எளிதாக புரிய உதவுகிறது. ஆண்டாள் நாச்சியாரின் திருமொழி, திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி, பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வாரின் திருவந்தாதி பாடல்களின் அர்த்தங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆன்மிக பயன்பாட்டு நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை