/ ஆன்மிகம் / ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
பிரேம பிரசுரம், 59, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 478.) சித்தர்கள், ஞானிகள், அருளாளர்கள், இறையடியார்கள் என்று தோன்றியவர்களுள் அனைத்துத் தன்மைகளும் பொருந்தியவராக விளங்கியவர் பகவான் ரமணர். மதமார்ச்சர்யங்களையும், ஜாதி துவேஷங்களையும் கடந்து நின்று அனைத்து மக்களையும் சம திருவன்போடு நோக்கி எல்லோருக்கும் அருள்பாலித்தவர் பகவான் ரமண மகரிஷி. பட்சிகள், மிருகங்கள், ஜந்துக்கள், தாவரங்கள் என அனைத்து ஜீவராசிகளிடமும் பிரியமானவராக வாழ்ந்தவர். அவரது வாழ்க்கைச் சரிதம் உயர்ந்த ஒழுக்கத்தின் பாற்பட்டது. ஆன்மிகப் பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட புதியதோர் அத்தியாயமானது "நான் யார் என்ற ஆன்ம விகாரத்தின் முடிந்த முதலானது மகோதன்னமானது. வாழ்க்கை வரலாறு, ஆன்மிக விகார உபதேசங்கள் என இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ள அற்புதமான நூல்.