/ மாணவருக்காக / தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!
தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!
தமிழில் பிழையின்றி எழுத உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். அடிப்படைத் தமிழ் இலக்கணத்தை, எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மட்டுமின்றி, மற்றவர்களும் தமிழ் இலக்கணத்தை அறிந்து, பிழை நீக்கி எழுத பெரிதும் உதவும்.சுருக்கமாகவும், தெளிவாகவும் எளிய நடையில் அமைந்துள்ளது. வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள், பிழையும் திருத்தங்களும் போன்ற பகுதிகள், சிறப்பாக உள்ளன. தமிழ் இலக்கணத்தை அறியும் ஆர்வமுடையோருக்கு மிக்க பயன் அளிக்கும் நுால்.– ராம.குருநாதன்