/ மாணவருக்காக / ஆசிரியரும்... அன்பு மாணவரும்...

₹ 50

ஆசிரியர் – மாணவர் உறவு பற்றிய நுால். உறவு எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என விவரிக்கிறது. ஆசிரியர் பணி முடித்து, ரயில்வே ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும், அரசு வங்கியில் இயக்குநராகவும் ஆற்றிய பணிகளை பேசுகிறது. வாழ்க்கை செயல்பாட்டை தெளிவாக முன்வைக்கிறது. ஏமாற்றுவதை விட தோல்வியை ஏற்றுக்கொள்வது பாக்கியம். இந்த அடிப்படையை ஆசிரியர் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறது. படிப்பினை தரும் நிறைவான சம்பவங்கள் உள்ளன. வழிகாட்டிய ஆசிரியர்கள், உடன் படித்த மாணவர்களுடனான சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. ராணுவ வீரரின் தியாகத்தை படம் பிடித்திருப்பது கண்களை குளமாக்கு கிறது. கற்பித்தல் அனுபவங்களின் தொகுப்பு நுால். – சிவா


சமீபத்திய செய்தி