/ கதைகள் / தலைமுறை தாண்டிய பந்தம்
தலைமுறை தாண்டிய பந்தம்
கூட்டுக் குடும்பத்தின் அருமை பெருமைகளை உணர்த்தும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள நாவல். தொழில்களுக்கு அடிப்படை விவசாயம் என எடுத்துரைக்கிறது. அத்தியப்ப கவுண்டர், நல்லம்மாள் என்ற கதாபாத்திரங்கள் வழியாக பழங்கால கால வாழ்வுமுறை கூறப்பட்டுள்ளது. நட்பு மனதில் பதியும் வண்ணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்பை காட்டுவதில் காலத்திற்கு ஏற்ப வார்த்தைகளும் மாறுபட்டு நிற்பதை தெளிவுபடுத்துகிறது. பாம்பால் குடும்பத்துக்கு ஏற்படும் பாதிப்பை எடுத்துரைக்கிறது. காலந்தோறும் காதலை வெளிப்படுத்தும் பாங்கு அருமையாக கூறப்பட்டுள்ளது. தலைமுறை இடைவெளி காதலை புரிந்து கொள்வதிலும் உண்டு என நயம்பட உரைக்கிறது. குடும்ப ஒற்றுமை அவசியத்தை எடுத்துரைக்கும் நாவல். – டாக்டர் கார்முகிலோன்




