/ சமயம் / மனித குலத்திற்கு முஹம்மது நபி(ஸல்–ம்) அளித்த கொடை
மனித குலத்திற்கு முஹம்மது நபி(ஸல்–ம்) அளித்த கொடை
முஹம்மது நபி அளித்த கொடைகளை அறியத் தரும் நுால்.இறைவனாக இல்லாததற்கு பணியாமல் இருப்பதே முதன்மை கொடை என விளக்குகிறது. மார்க்கத்தை கடைபிடிப்பதில் எந்த கட்டாயமும், நிர்ப்பந்தமும் இல்லை என்பதுடன், ஒரு வழிமுறையை பிறர் மீது திணிக்க முற்படுவது குற்றம் என்கிறது. மனிதனின் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு அளித்து, அதை எந்த வகையிலும் மீறக்கூடாது என்பதை எடுத்துரைக்கிறது. வாழ்வுக்கு தேவையானதை உருவாக்கியும், மாசுபடுத்துவதை தடுத்தும் இருப்பதை அறியத் தருகிறது. இஸ்லாம் நெறியை அறிய உதவும் நுால். – புலவர் சு.மதியழகன்