/ தமிழ்மொழி / திருக்குறள் (ஆங்கிலம்)
திருக்குறள் (ஆங்கிலம்)
வ .வே.சு.ஐயர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதிய நீண்ட முன்னுரையுடன் தரப்பட்டுள்ளது. திருக்குறள் கருத்தை பரப்பும் வகையில், 1916ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வ.வே.சு.ஐயர், அதற்கு தெளிவான முன்னுரையும் எழுதியுள்ளார். அது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறளும் தமிழில் தரப்பட்டு, அதற்கு உரிய ஆங்கில மொழியாக்கம் தொடர்ச்சியாக தரப்பட்டுள்ளது. திருக்குறளில் பழமையான சொற்களுக்கு விளக்கமும் உள்ளது. திருக்குறள் கருத்துகளை தெளிவான முன்னுரையுடன் மனதில் பதிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்புடன் கவரும் வகையில் அமைந்த திருக்குறள் நுால். – ஒளி