/ சமையல் / திருநெல்வேலி பாரம்பரிய சமையல்

₹ 350

நெல்லை என்றாலே உணவு வகைகளில் அல்வா என்பது தான் நினைவுக்கு வரும். இந்த மாவட்ட மக்களின் பாரம்பரிய உணவு வகைகளை நினைத்தாலே நாக்கில் நீர் ஊறும். இந்த ஊர் மக்கள் சுற்றுலா புறப்பட்டால், ஹோட்டலை நம்புவதை விட தங்கள் கைபக்குவத்தையே நம்புவர். பாத்திரம் பாத்திரமாக சித்ரான்னங்கள் வண்டியில் ஏற்றப்படும். ஆங்காங்கே கிடைக்கும் மர நிழல்களில் அல்லது ஆற்றங்கரைகளில் அமர்ந்து சாப்பிடுவது விருப்பமான ஒன்று. இதே போல சமைத்து சாப்பிட்டால் என்ன என்ற எண்ணம் தமிழகத்தில் அனைவருக்கும் இருக்கும். இவ்வகை உணவுகள் எந்த அளவு ருசியாக இருக்கும் என்பதை இந்த நுால் கையில் உள்ளோர் மட்டுமே அறிய முடியும். அந்த அளவுக்கு ருசியாக எழுதப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு சென்றோர் சொதிக் குழம்பை ருசிக்காமல் இருந்திருக்க முடியாது. இதன் செய்முறை இவ்வளவு எளிதானதா, இதை நம் ஊருக்கும் சொந்தமானதாக ஆக்கிக் கொள்ளலாமே என்று துடிக்கும் மனங்கள் ஏராளம். இதேபோல சாம்பார் வகை, ரச வகை, கறி வகைகளில் ஒலன், எரிசேரி, மோர் கீரை, புளிக்கீரை என்ற வித்தியாசமான பெயர்களில் சுவைகளை அள்ளி தரும் உணவு வகைகளை, இந்த நுால் கையில் இருந்தால் சமைக்க முடியும். ஊறுகாய், பச்சடி, கிச்சடி, கொத்சு, இனிப்பு வகை, பட்சணங்கள் என்று ஏராளமாய் நெல்லை மாவட்ட உணவு வகைகள் குவிந்து கிடக்கின்றன. தேவையான பொருட்கள், செய்முறை ஆகியவை எளிமையாக தரப்பட்டுள்ளன. இந்த நுால் கையில் இருந்தால், வீடு ஒரு குட்டி திருநெல்வேலியாக மாறிவிடும். – தி.செல்லப்பா


புதிய வீடியோ