/ வரலாறு / வாவேர் பள்ளிவாசல்

₹ 200

பழமையான, கம்பம் வாவேர் பள்ளிவாசல் வரலாற்றை விவரிக்கும் நுால்.அலாவுதீன் கில்ஜியின் படை தளபதி மாலிக் கபூர் படையெடுத்து கம்பம் பகுதியில் கோட்டை கட்டி ஆண்டதில் துவங்கி, தற்போதைய ஜமாத் கமிட்டி வரை விவரிக்கப்பட்டுள்ளது. சுவை குன்றாமல் தகவல்கள் பதிவு செய்திருப்பது தனித்த கவனம் பெறுகிறது.கம்பம், உத்தமபுரம் பெயர் பற்றி வரலாற்றை அறியும் வண்ணம் தகவல்கள் தரப்பட்டுள்ளன. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த சமண, சைவ வாதப்போர், அதற்கு அஞ்சி மதம் மாறியோர் பற்றியும் எடுத்துக் காட்டுகிறது. பள்ளி, தொழுகை, ஓதுதல், நோன்பு, ஆனம், படி போன்ற சமண சொற்கள் இஸ்லாம் சமயத்திற்கு வந்ததை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டுகிறது. அவசியம் படிக்க வேண்டிய நுால்.–- ஊஞ்சல் பிரபு


புதிய வீடியோ