/ புத்தக மதிப்புரை / வாழ்வாங்கு வாழ அருமையான 100 கருத்துக்கள்
வாழ்வாங்கு வாழ அருமையான 100 கருத்துக்கள்
---------------------------------------------------------------------- எ த்தனை புண்ணிய நதிகளில் நீராடினாலும், குணத்தை மாற்றிக் கொள்ளாத வரை மகிழ்ச்சி கிடைக்காது என கற்பிக்கும் நுால். கொள்கையில் தெளிவும், செயலில் உறுதியும் தான் வெற்றி பெற தேவையேயன்றி, தோள் வலிமையோ, இரும்பு ஆயுதமோ வேண்டாம் என்கிறது. இளகிய இதயம் போதும் பகைவரை வென்றெடுக்க என அறிவுரைக்கிறது. ஆரோக்கியமே மிகப் பெரிய செல்வம் என்கிறது. வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகள், ஆன்மிகச் சிந்தனைகள், உணவு மற்றும் மருத்துவக் குறிப்புகள், உடல் நலம் பேணுவதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. வாழ்வில் உயர வழிகாட்டும் நுால். – புலவர் சு.மதியழகன்




