/ புத்தக மதிப்புரை / விஜய பாரதம் தீபாவளி இதழ்

₹ 150

நாட்டின் வளர்ச்சி சார்ந்த செய்திகளுடன் அமைந்து உள்ளது விஜய பாரதம் தீபாவளி இதழ். அருள் தரும் ஆசி செய்திகள் நிறைந்துள்ளன. எளிய குடும்ப பின்னணியில் பிறந்து, இருப்பதை மூலதனமாக்கி அக்கறையுடன் உழைத்து, தொழில் துவங்கி வெற்றி ஈட்டியுள்ள சாதனையாளர்கள் பலரின் நேர்காணல்கள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. ஜவுளி உற்பத்தி, ரப்பரில் உதிரி பாகம் தயாரிப்பு, ஏற்றுமதி வாய்ப்பு, மருத்துவம், கோழிப்பண்ணை, தீவன தயாரிப்பு என பல வகைமைகளில் கடுமையாக போராடி முன்னணி வகிக்கும், 39 நிறுவனங்களை அடையாளம் காட்டுகிறது. இவற்றுடன் 21 சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள் இடம் பெற்றுள்ளன. தீபாவளி கொண்டாட்ட சிறப்பை கூறும் விரிவான கட்டுரை சுவாரசியமாக உள்ளது. அறியப்படாத விடுதலை போராட்ட தியாகிகளின் செயல்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. படிப்போருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது விஜய பாரதம் தீபாவளி இதழ். – சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை