Advertisement

அதிர்ச்சியூட்டும் இலஞ்சம்

₹ 110

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழை, நடுத்தர மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், வேண்டுதல்கள் லஞ்சம் இன்றி நிறைவேற்றப்பட்டாலே எந்த இலவசங்களையும் அரசு தர வேண்டியதில்லை. ‘லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். ஊழலில் ஈடுபடுவோரை துாக்கில் போட்டால் தான் சரியாக இருக்கும்’ என பலமுறை நீதிமன்றங்கள் அதிருப்தி தெரிவித்தாலும் லஞ்சம் ஒழிந்தபாடில்லை. லஞ்சம் தர மறுத்தவர்கள், வாங்கியோரை சிறைக்கு அனுப்பியவர்கள், அப்பணியைச் செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒப்பாவர் என்கிறார் இந்நுாலாசிரியர். அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்ற சிலர், லஞ்சம் தர மறுத்து நேர்மையை நிலை நாட்டிய நீதிமான்கள், லஞ்சம் சம்பந்தமான பிற செய்திகள் ஆகியவை குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். – சிவசு

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • ‌‌வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com

  • ‌‌வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com

  • ‌‌வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள பாணி கோவில்களையே அதிகம் காண முடியும். தமிழக பாணி கோவில்கள் மிகவும் குறைவு. ஆனால், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் முற்றிலும் மாறுபட்டது. தமிழக பாணி கோவிலா, கேரள பாணி கோவிலா என நம்மை குழப்பி வைக்கும். இரண்டும் கலந்தது அது. இதனால் தானோ என்னவோ, இந்தக் கோவிலைத் தரிசித்தாலே... ஊஹூம்...பார்த்தாலே போதும், தேனில் தோய்த்த பலாப்பழமாய் மனம் இனிக்கும். இந்தக் கோவிலின் வரலாறு மட்டுமல்ல, அதன் அமைப்பு, வழிபாட்டு முறை, சிற்பங்கள், கல்வெட்டுகள், பிரகாரங்கள்..என அங்குலம் அங்குலமாக...அல்ல..அல்ல... எள் முனை எள் முனையாக சிறிதளவு கூட இடம் விடாமல் அலசி அலசி ஆராய்ந்திருக்கிறது இந்த புத்தகம். திருவட்டாரை அங்குள்ள மற்ற கோவில்களுடன் ஒப்பிட்டதன் மூலம், குமரியின் அனைத்துக் கோவில்களையும் வலம் வந்த பெரும் திருப்தியை நாம் பெறுகிறோம். இந்தளவு ஒரு கோவிலை அலசி ஆராய முடியுமா என்பதை மற்ற நுால் ஆசிரியர்கள் கூட இந்த நுாலைப் பார்த்து தான் பாடம் படிக்க வேண்டும் என்றால் மிகையாகாது. தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வாசகர் மற்றும் நுாலாசிரியர்கள், கட்டுரையாளர்கள் கையில் இருக்க வேண்டிய புத்தகம் இது. – தி.செல்லப்பா

  • உடன்பிறந்த உறவுகள் பல இருந்தாலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடன் பயணிக்கும் ஒரே உறவு மனைவி மட்டுமே என்பதை இந்நுால் வெளிப்படுத்துகிறது. கவிஞர் இரா.இரவி கவிதைகளாலும், கட்டுரைகளாலும் மனைவியின் உன்னதத்தையும், மாண்பையும் அழகுற வெளிப்படுத்துகிறார். தன் மனைவியுடன் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களையும் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் மறைந்த தன் மனைவிக்கு இந்நுால் மூலம் புகழஞ்சலி சமர்ப்பித்திருக்கிறார். – ரெங்கா

புதிய வெளியீடுகள்