Advertisement

யோகாசனம் கற்றுக் கொள்ளுங்கள்


யோகாசனம் கற்றுக் கொள்ளுங்கள்

₹ 80

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் எந்த காரியத்தையும் செம்மையாகச் செய்ய முடியும் என்று உரைக்கும் நுால்.ஆசன பயிற்சி செய்வதால் நோய்கள் குணமடைவதை குறிப்பிடுகிறது. ஆசனங்களில் தேர்ச்சி பெற்றவரை மதகுருவாக போற்ற வேண்டியதில்லை என்கிறது. ஹடயோகம், ராஜயோகம், கரும யோகம், பக்தி யோகம், ஞான யோகம், மந்திர யோகம் குறித்து விளக்கம் தருகிறது. முக்கியமான, 32 ஆசனங்கள் படத்துடன் விளக்கப் பட்டுள்ளன. முதியோர் ஆற்றலைப் பெறவும், உடல் சிக்கலைப் போக்கும் வழிகளும், வருத்தாமல் செய்ய வேண்டிய ஆசனங்களும் விளக்கப்பட்டுள்ளன. யார் எந்தெந்த ஆசனங்களை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறது. உடல் உள்ளத்தை பேண உதவும் நுால். – புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்