/ கட்டுரைகள் / நாம் அறியவேண்டிய 100 அரிய விஷயங்கள்!

₹ 150

அறிஞர், ஆன்மிகவாதி, சிந்தனையாளர்கள் கூறும் செய்திகளை தொகுத்து தரும் நுால். மனைவிக்கு ஆடையாக கணவனும், கணவனுக்கு ஆடையாக மனைவியும் இருக்க வேண்டும் என்கிறது. ராமாயணத்தில் தசரதரின் நான்கு பிள்ளைகளும் நான்கு வகை தர்மங்கள் என குறிப்பிடுகிறது. உலகில் மனிதனுக்கு சொந்தமானது எது என கேள்வி எழுப்புகிறது. இந்த புத்தகம் அறிவின் சுரங்கம் என குறிப்பிடுகிறது. பசலைக்கீரையின் மருத்துவ குணங்கள் கூறப் பட்டுள்ளன. குளிர்நீரை குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை தருகிறது. நகைச்சுவையின் பலனை அறிவுறுத்துகிறது. தீப எண்ணெயின் மகத்துவம் குறித்து தகவல் தருகிறது. ஆரோக்கிய வாழ்விற்கு ஆலோசனை கூறும் பயனுள்ள நுால். -முனைவர் கலியன் சம்பத்து