/ கதைகள் / அஞ்சலி திருப்பிக் கொடுத்த வைர மூக்குத்தி
அஞ்சலி திருப்பிக் கொடுத்த வைர மூக்குத்தி
குறுநாவலும், சிறுகதைகளும் அடங்கிய அற்புத புத்தகம். மூன்று தோழியருக்கு இடையே நிலவும் நட்பு சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவ, இஸ்லாமிய தத்துவங்களின் ஒற்றுமை, வேற்றுமைகள் அலசி ஆராயப்பட்டுள்ளன. திருமணம் நிச்சயக்கப்பட்டவனை சோதித்து பார்ப்பதற்காக, தோழியர் நடத்திய விளையாட்டு எப்படி வினையானது என்பது பரபரப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. தொகுப்பில், ‘ஒரு கொலையும் மகாபாரதமும்’ சிறுகதை, திகில் நாவல் போல் உள்ளது. இல்லற வாழ்வில் தர்மத்தை ஒழுங்காக கடைப்பிடிக்காவிட்டால் நிகழ்வதை, ‘பேச்சு’ கதை பக்குவமாய் உரைக்கிறது. இவற்றில் வரும் பாத்திரங்களை, நிஜ வாழ்விலும் பார்க்க முடிகிறது. அருமையான கதை நுால். – டாக்டர் கார்முகிலோன்




