/ புத்தக மதிப்புரை / ஜி.டி.நாயுடு

₹ 60

இந்தியாவின் எடிசன் என போற்றப்பட்ட ஜி.டி.நாயுடு வாழ்வையும், சாதனையையும் எளிமையாக தரும் நுால். பள்ளிப் படிப்பு முடிக்காத நிலையிலும் சுய முயற்சியால் முன்னேறியதை எடுத்துக் கூறுகிறது. உணவகத்தில் வேலை பார்த்து, அந்த பணத்தில் ஆங்கிலேயரின் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கியதை குறிப்பிடுகிறது. அதை பிரித்துப் போட்டு வேலை செய்ததை அறிந்தது குறித்தும் விவரிக்கிறது. பஸ் மற்றும் மோட்டார் தொழிலில் முன்னோடியாக விளங்கியதை எடுத்து கூறுகிறது. ஷேவிங் பிளேடு, மின்சார மோட்டார், ரேடியேட்டரில் நீண்ட நாள் தண்ணீர் இல்லாமல் ஓட்டுவதற்கான பொருள் என கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியதை விவரிக்கிறது. தொழில், வேளாண் துறையில் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கியது குறித்த நுால். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை