/ கதைகள் / கடவுளைக் கொன்றவன்

₹ 300

எளிய மக்களின் செயல்பாடுகளை மையமாக கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்ணுக்கு உள்ளது போல் குரல் உடையவன் படும் இன்னல்கள், அதே குரலால் வாழ்வில் உயர்வதையும் கூறும், ‘பெண் குரல் பெரியசாமி’ கதை நம்பிக்கை விதைக்கிறது. அடமானம் வைத்த பாரம் பரிய நகை ஏலத்தால் வரும் மனப் பிரச்னையை, ‘தங்க வினை’ கதை தோலுரித்து காட்டுகிறது. விபத்து வழக்கில் அப்பாவியை சிக்க வைக்க முயலும், காவல் அதிகாரி செயலை, ‘மனிதம்’ கதை சுட்டிக் காட்டுகிறது. கோவிலுக்குள் பன்றி நுழைவதை மையமாக உடைய கதை அவநம்பிக்கையை சாடுகிறது. சாதாரண பிரச்னை, குடும்ப நல நீதிமன்றம் வரை செல்வதும், அதனால் ஏற்படும் இழப்பையும், ‘மணச்சிறை’ விவரிக்கிறது. சமூக நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக உள்ள கதைகளின் தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை