/ கதைகள் / கதிரின் மனைவி ஒரு மாணிக்கம்
கதிரின் மனைவி ஒரு மாணிக்கம்
நவரத்தினங்களால் கோர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்போ என்று வியக்கும் வண்ணம் அணி வகுத்துள்ளன. கணவனே கண் கண்ட தெய்வமாய் விளங்கும், ‘கதிரின் மனைவி’ கதை மாணிக்கமாக உள்ளது. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு படிப்பினை தருகிறது. பெற்றோர் கோபதாபம், பிள்ளைகளை பிரிக்க முடியாது என எடுத்துரைக்கிறது, ‘நட்பு உடைந்தது’ சிறுகதை. உள்ளத்தை உருக்கும், ‘நினைவெல்லாம் நீயே’ கதையில் அன்பும், காதலும் பரிசுத்தமானது என எடுத்துரைக்கிறது. கணினி யுகத்திலும் நடக்கிற ஜாதி கொடுமை அவலத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. எதிர்மறை சிந்தனைகள் தராது எதார்த்த நடையில் எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்




