/ புத்தக மதிப்புரை / கெங்கம்மா

₹ 300

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை பேசும் நாவல் நுால். தேனி பகுதியில் தொம்பர் சமுதாய மக்களின் வறுமையை, ஒடுக்குமுறைக்குட்பட்ட வாழ்வை, கொடுமைகளை மீறும் கெங்கா என்ற பெண்ணின் கதையாக விரிகிறது. அநீதிக்கு எதிராக குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கிறது. மலமும், சாக்கடையும் சூழ்ந்த வாழ்வில் மாற்றத்தை கொண்டுவர போராடுவதை கூறுகிறது. பிச்சை எடுப்போர் வாழ்க்கை விரிவாகவும் வேதனையோடும் பேசப்படுகிறது. அவமானம், புறக்கணிப்புகள், பசியை தாங்கிக் கொண்டு வாழ்வது ஆவணமாக சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையும், கற்பனையும் கலந்து படைக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மவுனமான வலிகளையும், எதிர்காலத்தின் நம்பிக்கையையும் சொல்கிறது. கெங்கம்மாவின் முடிவு நாவலுக்கு முத்தாய்ப்பாக நிறைகிறது. – ஊஞ்சல் பிரபு