/ வாழ்க்கை வரலாறு / நெஞ்சில் நிறைந்த எழுத்தாளர்கள்
நெஞ்சில் நிறைந்த எழுத்தாளர்கள்
பிரபல எழுத்தாளர்களின் வாழ்க்கை, எழுத்து முறை மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் நுால். மறைந்த எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஜெயகாந்தன், அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், ஆர்.சூடாமணி, க.நா.சு., கல்கி, பெரியசாமி துாரன், கொத்தமங்கலம் சுப்பு, லஷ்மி, தீபம் பார்த்தசாரதி உள்ளிட்ட 17 பேர் குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன. படைப்புகளில் உள்ளம் கவர்ந்த பகுதிகள் எடுத்தாளப்பட்டுள்ளன. எழுத்தாளர்களின் படங்களை கவரும் வகையில் ஓவியமாக்கி, அவர்களது படைப்புகளில் உள்ள சிறப்பு அம்சங்கள், அணுகுமுறை எடுத்து கூறப்பட்டுள்ளது. உ.வே.சாமிநாதையரை, ‘தமிழ் தாத்தா’ என அழைத்த எழுத்தாளர் பற்றிய விபரம் உள்ளது. எழுத்தாளர்கள் மீது உயர்ந்த மதிப்பீடு ஏற்படுத்தும் நுால். – மதி




