/ கதைகள் / நேமிக்கம்

₹ 150

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இந்நுாலாசிரியர் மகேந்திர பாபுவின் ஆறாவது படைப்பு இது. எட்டயபுரம் வட்டாரத்தில் பொன்னையாபுரம் கிராமத்தை மையமாகக் கொண்டு இந்நுால் எழுதப்பட்டுள்ளது. கால் நுாற்றாண்டுக்கு முந்தைய, நுாலாசிரியரின் பள்ளிக்கால அனுபவங்களே 14 சிறுகதைகளாக இந்நுாலில் இடம் பெற்றுள்ளன. இக்கதை மாந்தர்கள், உலகிற்கே உணவளித்துக் கொண்டிருக்கும் வேளாண் குடிமக்கள், அவர்களுக்கு உற்ற துணையாய் இருக்கும் ஆடுகள், மாடுகள், மரங்கள், உயிர் வளர்க்க உதவி புரியும் மழை, கண்மாய், நிலங்களே. கரிசல் பகுதி மக்களின் வட்டார மொழி உரையாடல்கள், பாத்திரப் படைப்புகள் அனைத்தும் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன. இக்கதைகளை வாசிக்கும் போது நம் மனம், கிராமத்து நினைவுகளை அசைபோடும் என்பதில் ஐயமில்லை. – சிவசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை