Advertisement

திருவருட்பா மூலம் முழுவதும்


திருவருட்பா மூலம் முழுவதும்

₹ 990

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வள்ளலார் ராமலிங்க அடிகள் இயற்றிய இலக்கியப் படைப்புகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். புத்தக துவக்கத்தில் ஒரு பாடல், வள்ளலாரின் கையெழுத்திலே அச்சிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதல் திருமுறை படைப்பு தொகுக்கப்பட்டுள்ளது. வரிசைப்படி, இரண்டு முதல் ஆறு திருமுறைகளும் அடுத்தடுத்து தெளிவுடன் அமைக்கப்பட்டுள்ளன.வள்ளலார் இயற்றிய பல்வகை தனிப்பாடல்கள் அடுத்து தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாடல்களை எளிதாக அறிந்துகொள்ள உதவியாக பதிக அகராதியும், பாட்டு முதற்குறிப்பு அகராதியும் தரப்பட்டுள்ளன. கெட்டி அட்டையுடன், தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ளது. அடிக்கடி புரட்டி படிக்க உகந்த வகையில் உள்ளது. வள்ளலாரின் முழு படைப்புகளின் தொகுப்பு நுால். – ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • ‌‌வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com

  • ‌‌வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com

  • ‌‌வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள பாணி கோவில்களையே அதிகம் காண முடியும். தமிழக பாணி கோவில்கள் மிகவும் குறைவு. ஆனால், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் முற்றிலும் மாறுபட்டது. தமிழக பாணி கோவிலா, கேரள பாணி கோவிலா என நம்மை குழப்பி வைக்கும். இரண்டும் கலந்தது அது. இதனால் தானோ என்னவோ, இந்தக் கோவிலைத் தரிசித்தாலே... ஊஹூம்...பார்த்தாலே போதும், தேனில் தோய்த்த பலாப்பழமாய் மனம் இனிக்கும். இந்தக் கோவிலின் வரலாறு மட்டுமல்ல, அதன் அமைப்பு, வழிபாட்டு முறை, சிற்பங்கள், கல்வெட்டுகள், பிரகாரங்கள்..என அங்குலம் அங்குலமாக...அல்ல..அல்ல... எள் முனை எள் முனையாக சிறிதளவு கூட இடம் விடாமல் அலசி அலசி ஆராய்ந்திருக்கிறது இந்த புத்தகம். திருவட்டாரை அங்குள்ள மற்ற கோவில்களுடன் ஒப்பிட்டதன் மூலம், குமரியின் அனைத்துக் கோவில்களையும் வலம் வந்த பெரும் திருப்தியை நாம் பெறுகிறோம். இந்தளவு ஒரு கோவிலை அலசி ஆராய முடியுமா என்பதை மற்ற நுால் ஆசிரியர்கள் கூட இந்த நுாலைப் பார்த்து தான் பாடம் படிக்க வேண்டும் என்றால் மிகையாகாது. தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வாசகர் மற்றும் நுாலாசிரியர்கள், கட்டுரையாளர்கள் கையில் இருக்க வேண்டிய புத்தகம் இது. – தி.செல்லப்பா

  • உடன்பிறந்த உறவுகள் பல இருந்தாலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடன் பயணிக்கும் ஒரே உறவு மனைவி மட்டுமே என்பதை இந்நுால் வெளிப்படுத்துகிறது. கவிஞர் இரா.இரவி கவிதைகளாலும், கட்டுரைகளாலும் மனைவியின் உன்னதத்தையும், மாண்பையும் அழகுற வெளிப்படுத்துகிறார். தன் மனைவியுடன் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களையும் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் மறைந்த தன் மனைவிக்கு இந்நுால் மூலம் புகழஞ்சலி சமர்ப்பித்திருக்கிறார். – ரெங்கா

  • ஏழை, நடுத்தர மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், வேண்டுதல்கள் லஞ்சம் இன்றி நிறைவேற்றப்பட்டாலே எந்த இலவசங்களையும் அரசு தர வேண்டியதில்லை. ‘லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். ஊழலில் ஈடுபடுவோரை துாக்கில் போட்டால் தான் சரியாக இருக்கும்’ என பலமுறை நீதிமன்றங்கள் அதிருப்தி தெரிவித்தாலும் லஞ்சம் ஒழிந்தபாடில்லை. லஞ்சம் தர மறுத்தவர்கள், வாங்கியோரை சிறைக்கு அனுப்பியவர்கள், அப்பணியைச் செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒப்பாவர் என்கிறார் இந்நுாலாசிரியர். அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்ற சிலர், லஞ்சம் தர மறுத்து நேர்மையை நிலை நாட்டிய நீதிமான்கள், லஞ்சம் சம்பந்தமான பிற செய்திகள் ஆகியவை குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். – சிவசு

  • சிறு வணிகர்களுக்கு உதவும் நுால். வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான எம்.எஸ்.எம்.இ., என்ற சமாதான் திட்டத்தில் பணத்தை மீட்கும் வழிமுறைகளை கூறுகிறது. தொழில் முனைவோர், நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த பயன்படும் வகையில் உள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்கம், மதிப்பு கூட்டல், கடன் இடைவெளி, ஏற்றுமதி பங்களிப்பு விபரங்களை விவரிக்கிறது. உத்யோக் ஆதார் பதிவை எளிமையாக்க உதவும் பதிவு முறையை அறிமுகப்படுத்தி, அது பற்றிய விபரங்களை தருகிறது. முத்ரா திட்டம் மற்றும் ஸ்டார்ட் -அப் நிறுவனங்கள் குறித்தும் விவரிக்கும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து

  • இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தை புதிதாகப் படிப்பது போல் ஆர்வம் ஏற்படுத்தும் நுால். படிக்க எளிமையாய், உள்ளது. ராமபிரான் இளம் வயதில் ஊனமுற்ற பெண் மீது கல்லைத் துாக்கி எறிந்தானாம். மந்தரை என்ற அந்தப் பெண், அவனை பழி வாங்கினாளாம். என்ன தான் ராமன் தெய்வப்பிறவி என்றாலும், இப்படி செய்தது தவறு தானே என தோன்றும். ஆனால், ராமனுக்கு மந்தரையை இழிவுபடுத்துவது நோக்கமல்ல என்பதை இந்த புத்தகம் உணர்த்தும். ராமனின் நல்ல நோக்கம், இந்நுாலை படித்தால் விடை தெரியும். ராமன் மீது கொண்டுள்ள அபிப்ராயம் மாறும். ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஒன்றாக்கி தந்துள்ள அற்புதமான புத்தகம். – தி.செல்லப்பா

  • இந்தியாவின் எடிசன் என போற்றப்பட்ட ஜி.டி.நாயுடு வாழ்வையும், சாதனையையும் எளிமையாக தரும் நுால். பள்ளிப் படிப்பு முடிக்காத நிலையிலும் சுய முயற்சியால் முன்னேறியதை எடுத்துக் கூறுகிறது. உணவகத்தில் வேலை பார்த்து, அந்த பணத்தில் ஆங்கிலேயரின் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கியதை குறிப்பிடுகிறது. அதை பிரித்துப் போட்டு வேலை செய்ததை அறிந்தது குறித்தும் விவரிக்கிறது. பஸ் மற்றும் மோட்டார் தொழிலில் முன்னோடியாக விளங்கியதை எடுத்து கூறுகிறது. ஷேவிங் பிளேடு, மின்சார மோட்டார், ரேடியேட்டரில் நீண்ட நாள் தண்ணீர் இல்லாமல் ஓட்டுவதற்கான பொருள் என கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியதை விவரிக்கிறது. தொழில், வேளாண் துறையில் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கியது குறித்த நுால். – முகிலை ராசபாண்டியன்

  • பலதரப்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களின் தொடர்பால் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து தரும் நுால். சென்னையில் எம்.எல்.ஏ., ஹாஸ்டல் எவ்வாறு பயன்பட்டது என்பதை விளக்குகிறது. வாழ்க்கைக்குப் பணம் தேவையில்லை. வசதிக்குத்தான் பணம் தேவை; வாழ்க்கைக்கு வாசிப்பு அவசியம் என்கிறது வயிற்றுப் பசி, அறிவு பசிக்கு உள்ள வித்தியாசத்தை கூறுகிறது. கட்சிகளுக்கும் பல்லாயிரம் கோடி அசையும் அசையா சொத்துக்கள் இருப்பதை குறிப்பிடுகிறது. கல்வி நிலையங்களில் படிக்கும் சூழல் நிலவினால் மாணவர்கள் சினிமா நடிகர்களை தேடி போக மாட்டார்கள் என்கிறது. அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய நுால். – வி.ராமலிங்கம்

  • இளங்கலை படிக்கும் போதே பணிக்கும் திட்டமிட வழிகாட்டும் நுால். என்ன, எங்கு படிக்கலாம், என்ன வேலை வாய்ப்பு என்பதை மூன்று பகுதிகளாக அமைத்துள்ளது. போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம், திறனறி தேர்வு பற்றிய விபரங்கள் தரப்பட்டு உள்ளன. பணியை திட்டமிடல், புத்திக்கூர்மை திறன், போட்டி தேர்வுக்கான தயாரிப்பு பற்றிய தகவல்கள் உள்ளன. வாழ்வின் செயல் திட்ட விளக்கம் தருகிறது. படிப்பு முடித்து வேலை தேட திட்டமிட்டு முன்னேற்பாடு செய்ய வேண்டியதை வலியுறுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு, பணியின் தன்மை, சூழல் மாற்றத்தை கவனிக்க கூறுகிறது. வெற்றிக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள நுால். – புலவர் ரா.நாராயணன்

  • பழந்தமிழர் இலக்கியங்களில் பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் ஆறு நுால்களுக்கு விளக்கம் தரும் நுால். நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பதுக்கு விளக்கங்களை தருகிறது. குறிப்புகள் நுால்களின் தன்மையை புரிய உதவுகின்றன. நாலடியார் பாடல்களின் வரலாற்று சூழலை குறிப்பிட்டு பொருள், விளக்கம் தரப்பட்டுள்ளது. நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பதுக்கு ஆசிரியர் குறிப்பு, பொருள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. பழந்தமிழர் அகம், புறவாழ்வியல் கூறுகளை அறிய தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

  • மென்மையான மனமும், நட்பும் உடைய இரண்டு இளம்பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள் சிவராணி; பெற்றோரை இழந்ததால் அண்ணன், அண்ணி பராமரிப்பில் வசிக்கிறாள். இவளது நெருங்கிய தோழி லேகா, மிகவும் வசதி படைத்தவரின் ஒரே மகள். வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை, தோழியின் அறிவுரைக்கு ஏற்ப அமைக்கும் இயல்புடையவள். லேகாவுக்கு மணம் முடிக்க தீர்மானம் செய்கிறார் தந்தை. மணமகனை பிடித்து போக, நிச்சயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சிவராணி கூறிய தகவலால் தோழியின் திருமணம் தடைபடுகிறது. இந்த கவலையால் லேகாவின் தந்தைக்கு மரணம் நிகழ்கிறது. மன அழுத்தத்துக்கு உள்ளாகும் சிவராணியை மணமுடிக்க, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் விரும்புகிறான். அவனது நடத்தையில் வெளிப்படைத்தன்மை இல்லை. சந்தேகத்தால் திருமணம் கைகூடாமல் போகிறது. சிவராணியை, சிங்கப்பூரைச் சேர்ந்த மாப்பிள்ளைக்கு மணம் முடிக்க ஏற்பாடு நடக்கிறது. கடைசியில் அதுவும் தடைபடுகிறது. வாழ்க்கையில் தனக்கு திருமணமே நடக்காது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறாள் சிவராணி. நம்பிக்கை இழந்து பல்வேறு தொல்லைக்கு உள்ளாகிறாள். மிகவும் வெளிப்படையாக பேசும் அவளது பண்பு மாறுகிறது. தொடர்ந்து புதிர்களுடன் கதை நகர்கிறது. உணர்ச்சி மிகுந்த திருப்பங்களுடன் சுவாரசியம் தருகிறது. சிவராணிக்கு திருமணம் நடைபெற்றதா... லேகாவின் வாழ்க்கை என்னவானது... மணிகண்டனின் உண்மையான முகம் என்ன... போன்ற முடிச்சுகளை அவிழ்ப்பது தனித்தன்மையுடன் அமைந்து உள்ளது. குமுதம் இதழ் நிறுவிய ஆசிரியர் எஸ்.ஏ.பி., உருவாக்கிய படைப்பு, அவரது நுாற்றாண்டில் சிறப்பு வெளியீடாக மலர்ந்துள்ளது. – மதி

புதிய வெளியீடுகள்